Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனக்கு பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை - லட்சுமி!

தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் ‘மூணே மூணு வார்த்தை’ படத்தில் பாட்டியாக லட்சுமி நடிக்கவிருக்கிறார். மேலும் லட்சுமிக்கு ஜோடியாக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் நடிக்கவிருக்கிறார். இது குறித்து லட்சுமி பேசிய போது, 

எனக்கு பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் நான் பாட்டிதானே.” மதுமிதாவுடன் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி கேட்டபோது “ இன்றைய காலகட்டத்தில் பெண் இயக்குனர்கள் மிகுந்த அனுபவத்தோடும், சினிமாவை பற்றிய ஆழந்த சிந்தனையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

 

மதுமிதா தனக்கு என்ன வேண்டுமென்று நன்கு அறிந்தவர். அத்தகைய தெளிவு இல்லாமல் குறுகிய காலத்தில் இரு மொழி படத்தை இயக்குவது சாத்தியமன்று. தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலைமைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியவை. அவர்கள் இன்னும் வியாபாரத்துக்கான ஒரு பொம்மையாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.” எனப் பளிச்சென்று கூறினார் லக்ஷ்மி.

இப்படத்தில் நடித்த அர்ஜுன், வெங்கி, அதிதி மற்றும் இயக்குனர் மதுமிதா அவர்களுக்கு எனது மானமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தை தயாரிக்கும் SP சரண் அவர்களுக்கு எனது நன்றிகளை தெறித்து கொள்கிறேன். ‘மூணே மூணு வார்த்தை’ திரைப்படம் குடும்பத்துடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு திரைப்படம்.” எனக் கூறி விடை பெற்றார் நடிகை லக்ஷ்மி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close