Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’வாலு’ படத்திற்கு க்ளீன் ’யு’- உற்சாகத்தில் சிம்பு!

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணெஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’வாலு’. 2012ல் அறிவிக்கப்பட்ட இப்படத்தில் முதன்முதலில் ஒப்பந்தம் ஆனவர் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும் படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. அடுத்து ஏப்ரல் 2012ல் சிம்பு நடிக்க உள்ளதாக இப்படம் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்காக மீண்டும் சிம்பு, நயன்தாராவை சேர்ந்து நடிக்க வைக்க இயக்குநர் விஜய் சந்தர் முயற்சி செய்தார் எனினும் அது நடக்கவில்லை. 

பின்னர் ஒப்பந்தமானவர்தான் ஹன்சிகா. இப்படத்தில் தான் சிம்பு மற்றும் ஹன்சிகாவின் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் படம் முடிவதற்குள் பிரிந்தது வேறு கதை. தற்போது படம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சென்சார் தறப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் வாலு சென்சார் டே என ட்ரண்டானது ஒரு பக்கம் என்றால் தற்போது சிம்பு ட்விட்டர் பக்கத்தில் ‘வாலு படத்திற்கு க்ளீன் யு, ரசிகர்களின் அன்புக்கு சிறப்பான நன்றிகள் என ட்வீட் செய்துள்ளார் சிம்பு. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close