Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர்ந்து 3 மொழிகளிலும் த்ரிஷா!

’என்னை அறிந்தால்’ படத்தையடுத்து திருமண நிச்சயம் முடிந்த பிறகும் கூட இன்னமும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, ‘ அப்பா டக்கர்’ மற்றும்  'லையன்’ ,'போகி’ என பல படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது அடுத்த படமாக இந்தியில் அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்கில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என உருவாக உள்ள இப்படத்தின் மூன்று மொழிகளிலும் த்ரிஷா நடிக்க இருக்கிறார். தமிழில் பிரசாந்த், தெலுங்கில் ரவி தேஜா நடிக்க உள்ளார். கன்னடத்தில் ஹீரோ யார் என்று இன்னும் முடிவாகவில்லை. 

எனினும் மூன்று மொழிகளிலும் த்ரிஷா நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் த்ரிஷா சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானது பிரசாந்த் நடித்த ‘ஜோடி’ படத்தில் என்றாலும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளது சிறப்பான விஷயம். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close