Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடல் உறுப்பு தானம் செய்தார் ’பில்லா-2’ நாயகி!

இந்திய அழகியாக 2008ம் ஆண்டு தேர்வானவர் பார்வதி ஓமனக் குட்டன். இந்தி படங்களில் நடித்து வந்தவர், மாடலிங்கில் அதிகம் கவனம் செலுத்திவந்தார். பின் அஜித்தின் ‘பில்லா -2’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். தமிழில் சொல்லுமளவிற்கு படங்கள் இல்லையென்றாலும் அஜித்தின் பில்லா-2 பட நாயகி என்ற பெயரில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 

தற்போது பார்வதிக்கு சமூக சேவைகளில் நாட்டம் அதிகரித்துள்ளது. ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று வருவதோடு பல உதவிகளையும் செய்யத் துவங்கியுள்ளார். தற்போது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு எடுத்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இறந்த பிறகு உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் நிறைய பேர் பயன் அடைவார்கள்.

உடல் உறுப்பு தானம் பற்றி முடிவு எடுத்ததும் என் தாய், தந்தை, சகோதரர் போன்றோரும் என்னுடன் வந்தார்கள். அவர்கள் எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். எனது பிறந்த நாளில்தான் இந்த முடிவை எடுத்தேன்.

பிறந்த நாளை பார்ட்டி, மது விருந்து சாப்பாடு என கொண்டாடுவது எனக்கு பிடிக்காது. உடல் உறுப்பு தானம் போன்று ஆக்கப்பூர்வமாக மற்றவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டாடலாம் என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close