Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் படத்திற்கு விலகியது முட்டுக்கட்டை! விரைவில் பாபநாசம்?

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் “பாபநாசம்” படத்தின் மேல் இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் “த்ரிஷ்யம்”. மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சக ரீதியிலும், வருமான ரீதியிலும் ஹிட் அடித்து பின்னர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கிலும், அடுத்து ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிப்பில் கன்னட மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் “பாபநாசம்” என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. அனைத்து மொழிகளுக்கான ரீமேக் உரிமையையும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சில மாதங்களுக்கு முன் சதிஷ்பால் என்பவர் தொடர்ந்த வழக்கில், “ பாபநாசம்”(த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய “ஒரு மழகாலத்” என்னும் நாவலில் உள்ள கதையே. இதற்கான உரிமையை என்னிடம் வாங்காமல் படமாக்கியதாகவும், பாபநாசம் படபிடிப்பை நிறுத்த கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனால் ”பாபநாசம்” படப்பிடிப்பிற்கு இடைக்காலத் தடை பெற்றிருந்தார்.

தயாரிப்பாளர் மேல்முறையீடு செய்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கினை தள்ளுபடி செய்து பாபநாசம் படத்திற்கு சாதகமாகவே தீர்ப்பளித்துள்ளார்.

முக்கால் பாகம் வேலை முடிந்துள்ள “பாபநாசம்” படத்திற்கான தடைமுற்றிலுமாக நீங்கியுள்ளதால் விரைவில் இசையும், படம் வெளியாகும் தேதியும் தெரியவரும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close