Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரெய்னாவுக்கு விரைவில் திருமணம்!

லகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து அசத்திய இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது

இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கும் உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த பிரியங்கா சவுத்ரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணப்பெண், சுரேஷ் ரெய்னாவின் தாயாரின் நெருங்கிய தோழியின் மகள் ஆவார். இருவருக்கும் சிறு வயது முதலே அறிமுகம் உண்டு. விழா ஒன்றில் பிரியங்காவை பார்த்த சுரேஷ் ரெய்னாவின் தாயாருக்கு, அவரை பிடித்து போய்விட்டது. இதையடுத்து சுரேஷ் ரெய்னாவுக்கு பேசி முடித்து விட்டார்.

மணப்பெண் பிரியங்கா, தற்போது நெதர்லாந்து நாட்டில் பணிபுரிந்து வருகிறார். உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் மார்ச் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறும்பட்சத்தில் 30 ஆம் தேதி வாக்கில்தான் இந்திய அணி தாயகம் திரும்பவுள்ளது.

ஒருவேளை இந்திய அணி கோப்பையை வென்றால், சுரேஷ் ரெய்னாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம்தான்...! 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close