Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் இணையும் விஜய் - ஆர்யா?

’மதராசப்பட்டினம்’ கூட்டணி மீண்டும் கை கோர்க்க உள்ளனர். இயக்குநர் விஜய் விக்ரம் பிரபு நடிக்கும் ‘இது என்ன மாயம்’ படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்த பின் அடுத்த படமாக ஆர்யாவுடன் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

ஆர்யா தற்போது ‘யட்சன்’ , வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’, ‘சைஸ் ஸீரொ’ மற்றும் ’பெங்களூரு டேஸ்’ ரீமேக் என பிசியாக இருக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என தெரிகிறது. 

 

இயக்குநர் விஜய் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுத துவங்கியுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விஜய் இயக்கம் என்றாலே இசை ஜி.வி.பிரகாஷாகத்தான் இருக்க முடியும் என்பதால் இந்த படத்திற்கும் ஜி.வி.இசையமைப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close