Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு?

’ஆம்பள’ படத்திற்கு பிறகு விஷால் நடித்து வரும் படத்திற்கு ’காவல் கோட்டம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ’பாண்டியநாடு’ படத்திற்கு பிறகு மீண்டும் விஷால் , சுசீந்திரன் இணைந்துள்ள இப்படத்திற்கு இசை டி.இமான். 

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சமுத்திரகனி விஷாலுக்கு அண்ணனாக நடித்து வரும் இப்படத்தில் பெங்களூருவைச் சேர்ந்த புது முகம் ஒருவர் வில்லனாக நடிக்கிறார். 

அண்டர் கவர் சீக்ரட் போலீசாக விஷால் நடிக்கும் இப்படத்திற்கு தலைப்பு வைக்காமல் இருந்தது. படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது படத்திற்கு ‘காவல் கோட்டம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்