Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’மாஸ்’ குழு புது திட்டம் !

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி, கருணாஸ், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் படம் ‘மாஸ்’. ஜாக்கி ஷரப் ஒரு முக்கிய ரோலில் வருகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

பேய், ஆவி சார்ந்த திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஒரு ப்ரோமோ பாடல் இடம் பிடிக்க உள்ளது. முந்தைய படமான ‘பிரியாணி’ படத்தின் ஒரு ப்ரோமோ பாடலுக்காக தமன், இமான், விஜய் ஆண்டனி, யுவன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. 

அதேபாணியில் தற்போது படத்தின் ஒரு ப்ரோமோ பாடலை இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாக்க உள்ளனர். படத்தின் அனைத்து பாடல்களும் யுவன் ஷங்கர் ராஜா இசை எனில் இந்த ஒரு பாடல் மட்டும் தமன் இசையமைக்க உள்ளார். 

இது மாஸான கானா பாடலாக இருக்கும் எனவும், இந்த படலுக்கு சூர்யா மற்றும் நயன்தாரா நடனமாட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் யுவன் சரியான நேரத்தில் இசையமைக்காததால் தமன் இந்த பாடலுக்கு இசையமைக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

அதற்கு பதில் சொல்லும் நோக்கில் வெங்கட் பிரபு, மற்றும் பிரேம்ஜி அமரன் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் யுவன் மாஸ் மியூசிக் டைரக்டர் எனவும் யுவன் = மாஸ் என ட்வீட் செய்துள்ளனர். எனவே இந்து வித்யாசமான நோக்கமே தவிர்த்து இதில் பிரச்னை எதுவும் இல்லை என்றே தெரிகிறது.

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close