Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4 கோடியில் பிரம்மாண்ட செட்! சூர்யாவின் அடுத்த படம்!

இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படம் 24. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்திற்காக மும்பையில் 4கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கே எடுக்கவிருக்கிறார்களாம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “மாஸ்” படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவிருக்கிறது. அதைத் தொடர்ந்து “24” படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா நடிக்கவிருக்கிறார். மேலும் ஜோடியாக சமந்தா நடிக்க, படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் .

’அலை’, ’யாவரும் நலம்’ (13பி), தெலுங்கில் “மனம்” போன்ற படங்களை இயக்கியவர் “விக்ரம் குமார்” அவர் இயக்கத்திலும் , ஹிந்தியில் ’அக்னிபாத்’, ’ஜோதா அக்பர்’ போன்ற படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் டியோஹன்ஸ் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாக உள்ளது. “மாஸ்” படம் போலவே இப்படமும் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறதாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close