Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘நான் வெளிப்படையான ஆள்.... ஐ லவ் யூ கோஹ்லி!’’ - ராக்கி சவந்த் பகீர் ஸ்டேட்மெண்ட்!

‘உலகக் கோப்பையில் ஃபைனல்ஸுக்கு இந்தியா முன்னேறிடுமா’ என்பதைவிட, ‘கோஹ்லியும் அனுஷ்கா ஷர்மாவும் ஒண்ணு சேர்ந்துடுவாங்களா?’ என்று கை பிசைந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்தான் அதிகம். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கிரிக்கெட் பார்ப்பது, கடற்கரையில் குளிப்பது, பார்ட்டி கொண்டாடுவது என்று இருந்தாலும், இன்னும் ஒருதலைக் காதலோடுதான் அனுஷ்காவுடன் ஊர் சுற்றுகிறார் கோஹ்லி. 

அனுஷ்கா ஷர்மா, நல்லுலகத்துக்கு இன்னும் தன் காதலை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், அந்த கேப்பில் சடாரென நுழைந்து அனுஷ்கா வயிற்றில் புளி-காரம் கரைத்திருக்கிறார் பாலிவுட் நடிகை ராக்கி சவந்த். அண்மையில் மும்பையில் நடந்த அழகு சாதன நிலையத் திறப்பு விழாவிற்கு வந்திருந்த ராக்கி சவந்த், ‘ஐ லவ் யூ கோஹ்லி’ என்று பத்திரிகை, டி.வி.க்கு முன்னால் வெளிப்படையாகவே தனது காதலை அறிவித்துவிட்டார். 



தமிழில் ‘கம்பீரம்’ படத்திலும், ‘முத்திரை’ படத்திலும் ஐட்டம் பாடலுக்கு ஆடிய ராக்கி சவந்த், பாலிவுட்டில் மார்க்கெட் இழந்த பிறகு, நம்மூர் நமீதா போல் கடைத் திறப்பு விழாக்களில் பிஸியாக இருந்தார். அப்படி ஒரு பிஸியான வேளையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராக்கி சவந்த், ‘‘இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த ஒரு அற்புத நட்சத்திரம் கோஹ்லி. ஆரம்பத்தில் அவர் ரசிகராக இருந்தேன். பின்னர் என்னை அறியாமல் என் மனதை அவரிடம் பறிகொடுத்து விட்டேன். ஐ லவ் யூ கோஹ்லி!’’ என்று காதலில் பொங்கிவிட்டார்.



‘‘ஏற்கெனவே அனுஷ்கா ஷர்மாவும் கோஹ்லியும் காதலிக்கிறார்களே? நீங்கள் இப்படிச் சொல்வது தப்பில்லையா?’’ என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர், ‘‘கோஹ்லி, அனுஷ்காவைக் காதலிக்கிறார் என்பது உலகத்துக்கே தெரியும். ஆனால், இன்னும் அனுஷ்கா தன் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லையே! ஆனால், நான் என் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய ஆள்! நான் என் காதலை உலகறிய ஒப்புக்கொள்கிறேன். அதனால், நான் கோஹ்லியைக் காதலிப்பதில் தவறில்லை!’’ என்று பகீர் குண்டு வீசியிருக்கிறார் ராக்கி சவந்த்.

விஷயம் அறிந்து, பீதியில் இருக்கிறாராம் அனுஷ்கா ஷர்மா.



- தமிழ்-

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close