Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடம்பிடிக்கும் அனுஷ்கா!

’இரண்டாம் உலகம்’ படத்தையடுத்து ஆர்யா, அனுஷ்கா, இணைந்து நடிக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் துவக்கவிழா சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவில் ஆர்யா அனுஷ்கா, ஜெயம் ரவி, மற்ற்யும் ஜெயம் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்து படத்தை துவக்கி வைத்தனர். படத்தை பழம்பெரும் இயக்குநர் ராகவேந்திர ராவின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே.எஸ்.பிரகாஷ் இயக்குகிறார்.

படத்தின் கதைப்படி ஸீரோ ஸ்ட்ரக்சர் மோகம் குறித்தும் அதைச் சார்ந்து நகரும் திரைக்கதையும் தான். இப்படத்தில் அனுஷ்கா இரண்டு ரோலில் நடிக்க இருக்கிறார். ஒரு அனுஷ்கா ஒல்லியாக, இடையழகியாவும், மற்றொரு அனுஷ்கா சற்று குண்டாகவும் என இரு வேடங்கள். 

எனினும் ஒல்லியான கேரக்டருக்காக உடற்பயிற்சி ஏதும் மேற்கொண்டீர்களா என கேட்கப்பட்டபோது, இந்த படத்திற்காக நான் எந்தவித உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பி.வி.பி. சினிமா நிறுவனம் தயாரிப்பில் ஏற்கெனவே நடித்திருக்கிறேன். அதேபோல், ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நான் திருமணம் செய்துகொள்வதற்காக ஒல்லியாக மாற முயற்சிக்கமாட்டேன். சந்தோஷமாக இருப்பதே திருமண வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணுபவள் நான். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமர்ஷியல் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். எனவே இவரது மற்றொரு கதாபாத்திரமான குண்டான அனுஷ்காவை மட்டும் கெட்டப் சேஞ்ச் செய்வார்கள் என்றே தெரிகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close