Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை பாட்டா முடியவே முடியாது - டாப்சியின் போடும் கண்டிஷன்கள்!

’ஆடுகளம்’ மூலம் தமிழில் எண்ட்ரீ ஆனவர் டாப்சி. தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’, ’ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இந்தியில் சில படங்களில் நடித்துவரும் டாப்சி. நடிப்பதில் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறாராம். 

தற்போது நடித்துவரும் 'ரன்னிங் ஷாடி.காம்’ படத்தில் இயக்குநரிடம் பல கண்டிஷன்கள் போட்டுள்ளார். படம் கல்யாணம், ரொமன்ஸ் என இருப்பதால் முத்தக்காட்சி வைத்தால் நன்றாக இருக்கும் என சிந்தித்த இயக்குநர் டாப்சியிடம் கேட்க நோ முத்தக்காட்சி என சொல்லிவிட்டாராம். 

இதே படத்தில் தற்போது ஒரு மழைப் பாடலுக்கு வெள்ளை நிற சேலை உடுத்தி நடனம் ஆடும்படி காட்சி வடிவமைக்கப்பட அதற்கும் நோ, வெள்ளை சீலை என்றால் கிளாமர் அதிகமாக இருக்கும் முடியவே முடியாது எனவும் சொல்ல உடனே வேறுவழியின்றி சிவப்பு நிற சீலையில் நடனம் ஆட வைத்துள்ளனர். 

இந்தியைப் பொருத்தவரை முத்தக்காட்சிகள், கிளாமர் எல்லாமே பெரிய விஷயமாக இருப்பதில்லை , ஆனால் டாப்சி இப்படி கண்டிஷன்கள் போடுவதால் இந்தி பட இயக்குநர்கள் தற்போது புதிய படத்தில் டாப்சியை ஒப்பந்தம் செய்வது என்றாலே யோசிக்கிறார்களாம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close