Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கௌதம்மேனன்-விஷால், சர்ப்ரைஸ் காம்பினேஷன்!

‘என்னை அறிந்தால்’க்காக ஏற்கெனவே பாதியில் விட்ட சிம்பு படத்தை ‘அச்சம் என்பது மடமையடா’ என பெயரிட்டு படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார் கௌதம்மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களையும் இறுதி செய்து விட்டார்.

அதில் விக்ரம் & சமந்தா காம்பினேஷனில் படம் இயக்குவது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து அவர் விஷாலை இயக்குவதுதான் ஷாக் சர்ப்ரைஸ். சுமோக்கள் பறக்க, பனை மரங்கள் சாய, ‘நானும் மதுரைக்காரன்தாண்டா’ என மரண மாஸ் ஆக்ரோஷம் காட்டும் விஷாலும்...

மயிலிறகாக வருடும் மான்டேஜ் பாடல் ஸ்பெஷல் கௌதம்மேனனும் இணையும் படத்தில் என்ன ஸ்பெஷல் என்ற எதிர்பாப்பு இப்போதே எகிறி அடிக்கிறது.  ஒருவேளை விஷால் இதில், ‘நானும் மெட்ராஸ்காரன்தாண்டா’ என வசனம் பேசுவாரோ?

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close