Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்தை தொடர்ந்து விக்ரம்?

இந்த வருடம் அனிருத் காட்டில் மழையென்றே சொல்லலாம். ’காக்கி சட்டை’, ‘ஆக்கோ’ , 'நானும் ரவுடிதான்’, ‘வேட்டை மன்னன்’, ‘ரங்கூன்’ என படு பிசியாகிவிட்டார். அஜித்தின் அடுத்த படத்தில் அனிருத்தான் இசை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை தனது யூ- டியூப் சேனலில் அதிகாரப்பூர்வ வீடியோவாக அனிருத் வெளியிட்டுள்ளார். தற்போது அடுத்த செய்தியாக விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். ’அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அப்படத்தில் விக்ரம் , காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். 

இந்த படத்தில் தான் அனிருத் இசையமைக்க உள்ளார். சென்ற வருடம் ‘வேலையில்லா பட்டதாரி’ , ‘கத்தி’ என ஹிட் கொடுத்தவர் தனது அடுத்த இன்னிங்சை ஆரம்பித்துவிட்டார்.  கலக்குங்க... 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close