Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிமுருகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் “ரஜினிமுருகன்” இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு, இசை வெளியீடு மற்றும் படம் வெளீயீடு தேதிகளை படக்குழுவினர் முன்னரே அறிவித்துள்ளனர்.

படத்தின் இயக்குநர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான பட வெளியீட்டு தேதிகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 25ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடும், ஜூன் 7ம் தேதி இசை வெளியிடும், ஜுலை 17 ரம்ஜான் விடுமுறை நாளில் படம் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். பொதுவாக பாலிவுட் படங்களில் மட்டுமே முன்னரே அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியிடப்படும். 

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் இசையை டி.இமான் அமைக்கிறார். விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டிங்கை கவனிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராமின் அடுத்தப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close