Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கில்லி கோச்சராக சமுத்திரகனி...

நமது கிராமப்புற மக்களின் பழங்கால விளையாட்டுகளில் ‘கில்லி’ விளையாட்டும் ஒன்று. இன்றளவும் கூட இந்த விளையாட்டு கிராப்புறங்களில் பெரியவர்களே பந்தயம் கட்டி விளையாடி வருகிறார்கள். இதற்கு தனி பயிற்சியாளர்களும் உண்டு.

’கில்லி’ என பெயர் வைத்தும் கூட விஜய் நடித்த படத்தில் கபடியையே மையமாக வைத்து படமாக்கப்பட்டிருக்கும்.  தற்போது சமுத்திரகனி நடிக்கும் ’பெட்டிக்கடை இன்று விடுமுறை’ என்ற பெயரில் உருவாகி வரும் படம் முழுக்க முழுக்க கில்லி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. 

சமுத்திரகனி இப்படத்தில் ‘கில்லி’ கோச்சராக நடிக்க இருக்கிறார். இப்படம் முழுமையான கில்லி விளையாட்டு முறையை நகர வாசிகளுக்கும் எடுத்துரைக்கும் என படத்திற்கு நெருங்கிய வட்டங்கள் தெரிவித்துள்ளனர். பாஸ் இந்த கோலி, பம்பரம் இதெல்லாம் விட்டுட்டீங்களே, அந்த படமெல்லாம் எப்போ? 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்