Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கெத்து’வை உறுதி செய்தார் உதயநிதி!

‘நண்பேன்டா’வைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படத்தை ‘மான் கராத்தே’வை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார். இதில் சத்யராஜ், ஏமி ஜாக்சன், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் சத்யராஜுக்கு உடற்கல்வி ஆசிரியர் கேரக்டர். அவரின் மகனாக உதயநிதி நடிக்கிறார். ‘மைனா’, ‘கும்கி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

 

ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ‘கெத்து’ என்று தலைப்பிட்டு பட வேலைகள் நடந்து வந்தன. ஆனால் ‘கெத்து’வை வேறு யாரோ பதிவு செய்து வைத்திருந்தால் வேறு தலைப்பு தேடி வந்தனர்.

‘‘‘கெத்து’தான் கதைக்கேற்ற தலைப்பு. விடக்கூடாது’ என விரட்டி, கடைசியில் கெத்து’வை பிடித்து விட்டார் உதயநிதி. கெத்து காட்டுங்க பாஸ்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close