Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா?.... ரசிகர்கள் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் சுவாரஸ்ய பதில்கள்...

 ’காக்கி சட்டை’ 25வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் சிவகார்த்திகேயன் லைவ் சாட் செய்த வேளையில் ட்விட்டரில் #ChatwithSK  என சென்னை ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கேள்விகளும் , சிவாகார்த்திகேயனின் சுவாரஸ்ய பதில்களும்.

சிவகார்த்திகேயன் ஆரம்பிக்கையில் ஈஸியான கேள்விகளாக கேட்கவும் நண்பர்களே என ட்வீட் செய்ய,  எந்த கேள்வி கேட்டாலும் நீங்கள் ஈஸியாகத்தனே பதில் சொல்லபோகிறீர்கள் அண்ணா. என ரசிகர் ஒருவர் பதில் ட்வீட் கொடுக்க சாட் ஆரம்பமானது.

கேள்வி: இவ்வளவு போராட்டத்துலயும் எது உங்களை சோம்பல் இல்லாமல் வைத்திருக்கிறது?

பதில்: தியேட்டரில் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவு, எனக்கு நம்பிக்கையும், எப்படி நான் வேலை செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது.

கேள்வி: சமீப வருடங்களாகவே தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என பி, சி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே ? என்ன செய்கிறீர்கள் அதற்கு?

பதில்: எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.

கேள்வி: ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?

பதில்: இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.

கேள்வி: உங்களின் ‘‘காக்கி சட்டை’ மற்றும் ‘ எதிர் நீச்சல்’ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் , இயக்குநர் துரைசெந்தில்குமார் குறித்து கூறுங்கள்?

பதில்: அவர் தான் என்னை மாற்றியவர். மேலும் திரையில் வித்யாசமான முயற்சிகளும் செய்ய வைத்தவர்.

கேள்வி: தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்

பதில்: புதுபேட்டை.

கேள்வி: மகேஷ் பாபு குறித்து உங்கள் பதில்? அவரது படங்களில் எந்த படம் உங்கள் ஃபேவரிட்?

பதில்: அவர் திரையில் வந்தாலே பிடிக்கும். அவரது வசன உச்சரிப்பு மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்தது மகிழ்ச்சி.

கேள்வி: கல்லூரி மாணவனாக நடிப்பீர்களா?

பதில்: கண்டிப்பாக , காத்திருக்கிறேன், அது வேடிக்கையாக இருக்கும்.

கேள்வி: பாண்டிராஜ் தான உங்களுக்கு கே.பி?

பதில்: தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.

கேள்வி: அனிருத்திடம் உங்களுக்கு பிடித்தது?

பதில்: தன்னம்பிக்கை, பக்குவம், மற்றும் திறமை.

கேள்வி: ராஜமௌலி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?

பதில்: அவர் மிகவும் பெரிய மனிதர். கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.

கேள்வி: விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா? அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?

பதில்: எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்…

பலரின் கேள்விகளுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க ஆசைதான் .கண்டிப்பாக அடுத்த முறை பதிலளிக்கிறேன். #ChatwithSK   என ட்ரெண்ட் செய்தமைக்கு மிக்க நன்றி. என ட்வீட் செய்துவிட்டு விடைபெற்றார்.

 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close