Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக்கில் இணைந்தார் இளையராஜா!

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இசைஞானி இளையராஜாவும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி ராஜா ஃபேஸ்புக்கில் இணைந்த நிலையில், மூன்றே நாளில் 12 லட்சத்து 60,120 பேர் அத்தளத்தை லைக் செய்து ஃபாலோயர்களாக உள்ளனர்.

இது குறித்து இளையராஜாவின் ஆலோசகர் ஜி.ஏ. சொக்கலிங்கம் கூறுகையில், " இளையராஜா பெயரில் ஃபேஸ்புக்கில் ஏராளமான போலி கணக்குகள் உள்ளன. இந்த போலி தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க இளையராஜா விரும்பியே அவர் அதிகாரப்பூரவமாக ஃபேஸ்புக்கில் ( https://www.facebook.com/Ilaiyaraaja ) இணைந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை தானே வெளியிடும் வீடியோ ஒன்றையும் அதில் போஸ்ட் செய்துள்ளார்" என்றார். 

அந்த வீடியோவில், " என்னுடைய ரசிகரிகள் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். சமீபத்தில் என்னைபற்றி சில தவறான தகவல்கள் இணையதளங்களில் பரவின. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளேன்.

இதுதான் எனது அதிகாரப்பூர்வ தளமாகும். எனது இசையமைப்பு பணிகள் குறித்த அனைத்து தகவல்களும் இனிமேல் இதில் இடம்பெறும்" என இளையராஜா கூறியுள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close