Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அப்பா டக்கர்’ படத்தில் சிம்பு, சுவாதி ரெட்டி குரல்களில் பாடல்!

’ஜெயம்’ ரவி , த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அப்பா டக்கர்’. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு பாடல்களே பாக்கி இருக்கிறது. மேலும் இந்த பாடல்களை யார் பாடப்போகிறார்கள் என்பதே சுவாரஸ்யம். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சலி ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் படம் ‘அப்பாடக்கர்’. சூரி காமெடியனாக நடித்து வரும் இப்படத்தில் ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் வருகிறார். படத்திற்கு இசை தமன். 

இப்படத்தில் சிம்பு, ஸ்வாதி ரெட்டி இணைந்து ஒரு பாடல் பாட உள்ளனர். பாடகர் சுவாதியாக தமிழுக்கு அந்தளவிற்கு பரிட்சயம் இல்லாத சுவாதிக்கு இந்த படத்தின் பாடல் ஒரு அறிமுகம் என்றே சொல்லலாம். மேலும் தெலுங்கில் இதுவரை ’கதா ஸ்க்ரீன்ப்ளே தர்ஷகத்வம் அப்பலராஜு’ , ’100% லவ்’, மற்றும் ’ஸ்வாமி ரா ரா’ உள்ளிட்ட படங்களில் ஒவ்வொரு பாடல்கள் பாடியுள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close