Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களை இழிவுபடுத்துகிறார் கானா பாலா.... இயக்குநர் பேரரசு பாய்ச்சல்!

ஆண்களை ஏமாற்றும் பெண்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது போன்று இவரது பாடல் வரிகள் இருக்கின்றன.

இதற்கு டைரக்டர் பேரரசு கண்டனம் தெரிவித்து உள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பாடுவதை பாலா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து உள்ளார். 

இது குறித்து பேரரசு பேசுகையில்,கானா பாலாவின் பாடல்கள் பெண்களை அவமதிக்கும் விதத்திலேயே உள்ளன. காதலித்து ஏமாற்றுபவர்கள் பெண்கள்தான். கணவன்மார்களை பெண்கள் ஏமாற்றுகிறார்கள். குடும்ப பெண்களும் கணவனுக்கு மோசம் செய்கிறார்கள் என்பதுபோல் பாடல்களை எழுதி பெண் குலத்தை கானா பாலா வசை பாடி வருகிறார். இனிமேல் இது மாதிரி பாட்டு எழுதுவதை பொறுத்து கொள்ள முடியாது. 

கானா பாலா மேல் பெண்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இனிமேல் இதுபோல் அவர் பாடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கு பதில் அளித்து கானா பாலா கூறும்போது, ‘‘டைரக்டர்கள்தான் அதுபோன்ற பாடல்களை எழுதும்படி என்னை நிர்ப்பந்திக்கிறார்கள். மற்றபடி பெண்கள் மேல் நான் நிறைய மதிப்பு வைத்து இருக்கிறேன்’’ என்றார். வேறு யாராவது இதை கூறியிருந்தால் பரவாயில்லை. தனது பாடல் வரிகளில் இரட்டை அர்த்த வரிகளை அள்ளித் தெளிக்கும் இவர் அடுத்தவரை குறை கூறுவதா என கோலிவுட் வட்டாரங்கள் தற்போது ஒரு பக்கம் கிசு கிசுக்கத் துவங்கியுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close