Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெர்சல் ஆகுதா? ...நம்ம டைரக்டர்ஸ் ரெஸ்டாரென்ட் போய் ஆர்டர் பண்ணா...

நம்ம டைரக்டர்ஸ் ரெஸ்டாரென்ட் போய் ஆர்டர் பண்ணா...

‘‘ஊருக்குள்ள எத்தனையோ கடை இருந்தும் உங்க கடைக்கு வந்திருக்கோமே... ஏன் ஜெஸ்ஸி? ஏன்?’’ என கெளதம் மேனன் கசிந்துருக ‘‘சார் என் பேர் ஜெஸி இல்ல, சர்வர் சசி’’ என விளக்கம் கொடுத்த சர்வரிடம் ‘‘மெல்லிசான ஒரு தோசை. தோசைக்கு இந்தப் பக்கம் தேங்காச் சட்னியும் அந்தப் பக்கம் புதினா சட்னியும் வெச்சு எடுத்துட்டு வாங்க. அதுக்கெல்லாம் முன்னால ஐ நீட் எ கப் ஆஃப் காபி அர்ஜென்ட்லி. இட்ஸ் மேட் மீ அஸ் வொண்டர்ஃபுல்’’ என கசிந்துருகி மெனுகார்டையே கவிதையாய் படிக்கத் தொடங்குகிறார்!

‘‘இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் கும்பகோணத்துக்கு கிழக்கே ஒரு தமிழர் கண்டுபிடிச்ச இடியாப்பத்தோட மார்டனைஸ் வெர்ஷன்தான் நூடுல்ஸ் என்பது உங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?” என்ற இன்ட்ரோவோடு என்ட்ரி ஆகி டரியலாக்குகிறார் முருகதாஸ். ‘‘பட், இங்கே நூடுல்ஸும் இல்ல, இடியாப்பமும் இல்லை” என்று சர்வர் பதிலளிக்க ‘‘ரெண்டு இட்லி. ரெண்டே ரெண்டு இட்லி” என ஆர்டர்செய்த பின் ரெஸ்டாரென்ட்டின் ப்ளூ பிரின்ட்டை மனதுக்குள் ஓட்டுகிறார்!

‘‘ஆக்சுவலா நா ரெடிமேட் செட் போட்ட ரெஸ்டாரென்ட்டுனு நெனச்சேன். பட், செங்கல் வெச்சு கட்டிருக்கீங்க. ஓகே ஃபைன். சர்வ் பண்ண ‘ரோபாட்’லாம்  இல்லியா?’’ என வந்த வேகத்தில் ஷங்கர் கொளுத்திப்போடுகிறார். ‘‘ராபர்ட் இன்னிக்கு லீவ் சார். நாளைக்கு வந்துடுவார்” என கவுண்டர் கமென்ட் வர, மெர்சல் ஆன ஷங்கர் ‘‘என்ன இருக்கு?’’ என்கிறார். ‘‘பொங்கல் இருக்கு சார்...’’

‘‘அப்புறம்?’’
‘‘பூரி இருக்கு சார்...’’
‘‘அதுக்கும் மேல?’’
‘‘ரவா கிச்சடி இருக்கு சார்...’’
‘‘அதுக்கும் மேல?’’
‘‘ஆனியன் தோசை இருக்கு சார்...’’
‘‘அதுக்கும் மேல?’’
‘‘சப்பாத்தி இருக்கு சார்...’’
‘‘அதுக்கும் மேல?’’
‘‘சீலிங் ஃபேன் இருக்கு சார். பட், அதை விக்கிறது இல்ல’’ என சர்வர் கடுப்பாக ‘‘இந்த லோகத்துல யாருக்குமே அக்கறை இல்ல’’ என டென்ஷனாகி சாப்பிடாமலே வெளியேபோகிறார் ஷங்கர்!

க்கத்து டேபிளில் விட்டத்தைப் பார்த்தபடி கூலருடன் அமர்ந்திருக்கிறார் மிஷ்கின். பக்கத்தில் சென்ற சர்வரின் கால் கட்டை விரலையே கால்மணி நேரமாகப் பார்க்கிறார். ‘‘ஆர்டர் சார்’’ என சர்வர் குரல் கொடுக்க ‘‘அதாவது அமானுஷ்யம்கிறதுதான் வாழ்க்கை’’ என டயலாக் டெவலப் ஆக இடைமறித்த சர்வர் ‘‘உங்க குறியீடு கண்டுபிடிச்சு நான் கொண்டு வர்றதுக்குள்ளே காலண்டர்ல மறுநாள் தேதியையே கிழிச்சிடுவாய்ங்கே சார். கடையை சாத்தணும். நடையைக் கட்டுங்க’’ என கும்பிட்டுத் தெறித்து ஓட, ஓர் ஆங்கில நாவலை புரட்டிப் படித்தபடி தலைகுனிந்துகொண்டே வெளியேறுகிறார் மிஷ்கின்!

- ஜெ.வி.பிரவீன்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close