Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரை சதம் அடித்த ‘என்னை அறிந்தால்’!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் , த்ரிஷா, அனுஷ்கா , அருண் விஜய், விவேக் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்’ வெளியான முதல் மூன்று நாட்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடின. மீண்டும் ‘ஷமிதாப்’, ‘அனேகன்’ என இரு பெரிய படங்கள் வெளியான போதும் ‘என்னை அறிந்தால்’ தனது ஓட்டத்தில் சோடை போகவில்லை. 

இந்நிலையில் தற்போது படம் 50வது நாளை எட்டியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக மழை வரப்போகுதே, மற்றும் ‘உனக்கென்ன வேணும் இந்த இரு பாடல்களும் பல மியூசிக் சேனல்களின் டாப் லிஸ்டில் உள்ளது. 

இசை வரிசைகளிலும் இன்னமும் முதல் மூன்று இடங்களை ‘என்னை அறிந்தால்’ தக்க வைத்துள்ளது. தற்போது சத்யம், லக்ஸ், எஸ்கேப், மாயாஜால், ஐநாக்ஸ், போன்ற மால்களிலும், வெளியூர்களில் ஓரிரு தியேட்டர்களிலும் 50வது நாளை எட்டியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்