Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய படம்!

’பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய திரு.எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை முதல் முறையாக வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிக்க இருக்கிறார். படத்தின் விஜய் சேதுபதி முதல்முறையாக போலீசாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். 

ஒளிப்பதிவு   -   தினேஷ்கிருஷ்ணன் /    இசை   -  நிவாஸ்.கே.பிரசன்னா, படத்தொகுப்பு    -   ஸ்ரீகர்பிரசாத் /   கலை -   பாலசந்தர், சண்டை   -  அன்பறிவ் ( அன்பு & அறிவு ) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களும் இனணந்து பணியாற்ற உள்ளனர்.  விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ள இப்படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. 

ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’, படம் முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. மேலும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்புகளும் முடியும் தருவாயையை எட்டியுள்ளது. இப்படத்தையடுத்து விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பார் என தெரிகிறது. மேலும் விஜய் சேதுபதியும், ரம்யா நம்பீசனும் நடித்த ‘பீட்ஸா’ படத்தின் வெற்றி யாவரும் அறிந்ததே. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்