Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம்பு படத்துக்கு இசை அனிருத்... இயக்குநர் கிருத்திகா... விரைவில் அடுத்த படம்!

சிம்பு ஹீரோவாக நடிக்கும்  புதிய படத்தை ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு இசை அனிருத். மேலும் ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த  ரிச்சர்ட் என். நாதன் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ஹீரோயின் தேர்வு நடைபெற்றுவருகிறது.

சிம்பு , ஹன்சிகா நடிப்பில் ‘வாலு’ படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகாத நிலையில் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளன.


அதேவேளையில் கௌதம் மேனன் இயக்கத்தில் ’அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்புகளும் நடந்துவருகின்றன. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் ’வேட்டைமன்னன்’ படத்தின் படப்பிடிப்புகளும் ஆரம்பமாகும் என தகவல் கசிந்தது. எந்த படமாக இருப்பினும் ஏதேனும் ஒரு படம் சிம்பு நடிபில் வராதா என அவரது ரசிகர்கள் சிம்புவின் ட்விட்டர் பக்கத்திலேயே ஆதங்கத்தை வெளிப்படுத்த துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்