Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.டியும் , திகிலும் கலந்து உருவாகும் யூகன்!

ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் 5 பேர்களின் எண்ணங்களை நகைச்சுவை கலந்து திகில் மற்றும் பல திருப்பங்களுடன் உருவாகிவரும் படம்தான் ‘யூகன்’.இப்படத்தின் சிறப்பம்சமாக கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் கேமரா தந்திரம் மற்றும் மேக்கப் மூலமாக திகில் காட்சிகளை மிகவும் எடுத்துள்ளனராம்.

யாஸ்மித், சித்து, ஷாம் கீர்த்திவாசன், பிரதீப் பாலாஜி, சாக்‌ஷி அகர்வால், ஆயிஷா, தருண் சக்ரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் ஆகிய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை இயக்குகிறார் கமல் குமார் .இவரே படத்தை தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருக்கிறார்.

படத்தைப் பற்றி கமல் குமார் கூறும்போது, “இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் புதுசா இருக்கணும் என்பதற்காக புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளேன். இப்படத்தின் ஒளிப்பதிவை ரவி அறுமுகம் செய்திருக்கிறார். ரஷான்ந் அரவிந்த் இசையில் 3 பாடல்கள் உருவாகியிருக்கின்றன.

அலெக்ஸ் பிரமானந்த் படத்தின் திகில் காட்சிக்கான பணியை செய்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் திகில் காட்சிகள் அதிகம் பேசப்படும். இதற்காக ஒன்றரை மாதம் மிகவும் கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்.

இப்படத்தின் நாயகி சாக்‌ஷி அகர்வால், பாதி நேரம் ஐ.டி பெண்ணாகவும், மீதி நேரம் பேயாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி வரை ஹீரோ யார் என்றே தெரியாது. நான் இப்படத்திற்கு எடிட்டிங்கும் செய்திருக்கிறேன்.இது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். இப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அபிராமி ராமநாதன் இப்படத்தை வெளியிடுகிறார்” என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close