Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசாரணை படத்தை எடிட்டர் கிஷோருக்காக சமர்பணம் செய்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் “ விசாரணை”. இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. அதில் சமீபத்தில் இறந்துபோன தேசிய விருது பெற்ற எடிட்டர் டி.ஈ.கிஷோருக்கு இந்தப்படத்தை சமர்பணம் செய்துள்ளார் வெற்றிமாறன்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ’ஆடுகளம்’ படத்தில் எடிட்டராக பணியாற்றியவர் கிஷோர். அந்தப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். கடைசியாக “விசாரணை” படத்தின் எடிட்டிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மூளையில் ஏற்பட்ட ரத்த அடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அதனால் நேற்று வெளியான டிரெய்லரின் ஆரம்பத்தில் “ என் எடிட்டர் கிஷோர் டி.ஈ. அவர்களுக்கு, இந்தப்படத்தில் முழு உதவியுமாக எனக்கு இருந்ததற்கு சமர்பிக்கிறேன்” என்று ஆரம்பமானது.

உண்மைச் சம்பவத்தினை மையமாக கொண்டு வெளிவந்த எழுத்தாளர் எம்.சந்திரகுமார் என்பவரின் நாவலை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். ’அட்டகத்தி’ தினேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மே மாதத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்