Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ருதி ஹாசன் மீது க்ரிமினல் வழக்கு...

பிவிபி சினிமாஸ் ஸ்ருதி ஹாசன் மீது சிவில் மற்றும் க்ரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது.

கார்த்தி , நாகார்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் துவங்கி நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் நாயகியாக ஸ்ருதி ஹாசனிடம் பேசப்பட்டு அவரும் படத்திற்கு ஓகே சொல்லி ஒப்பந்தமானார். தற்போது ஸ்ருதி ஹாசன் கால்ஷீட் இல்லை, என நடிக்க மறுப்பதாக பிவிபி சினிமா ஸ்ருதி ஹாசன் மீது சிவில் மற்றும் க்ரிமினல் வழக்கு பதிந்துள்ளனர்.

இதுகுறித்து பிவிபி சினிமா கூறுகையில் கார்த்தி , நாகார்ஜுன் நடிப்பில் தமிழ் , தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்து வைத்திருந்தோம்.

அவரது தேதிகளை கேட்டு அதற்கேற்பவே ஷூட்டிங் தேதிகளை ஒதுக்கியிருந்தோம் . தற்போது என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது எனக்கு தேதிகள் இல்லை என ஒரு இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. எனவே ஸ்ருதி மீது சிவில் மற்றும் க்ரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளோம் என கூறியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பிவிபி சினிமா மீது தவறில்லை என்பதை அறிந்து கொண்டு ஸ்ருதி ஹாசன் புதிய படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். எனினும் இது குறித்து ஸ்ருதி தரப்பில் அமைதி காத்து வருகின்றனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close