Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்ன கனவு கண்டிருப்பார்கள்?

னக்குள் ஒருவன்’ படத்தில் ‘லூசியா’ என்ற மாத்திரையைச் சாப்பிட்டு கனவில் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ்வார் ஹீரோ சித்தார்த். நிஜத்தில் சில பிரபலங்களிடம் இந்த மாத்திரையைக் கொடுத்தால் என்ன கனவு கண்டிருப்பார்கள்?
 
ரஜினி: கட் பண்ணா... இமயமலை அடிவாரத்தில் உறைந்துபோன ஒரு ஏரிக்குப் பக்கத்தில் எளிமையாய் இளநீர்கடை போட்டபடி உட்கார்ந்திருப்பார். ‘பாபாஜி கை பட்ட இளநீர்மா... சீ...விடுவேன்...’ என பக்தர்களுக்கு சீவிக்கொடுப்பார். ‘இளநீல தண்ணி இல்லைங்க’ என யாரும் சொன்னால், ‘எல்லாம் மாயா’ என மேலே கையைக் காட்டி கிறுகிறுக்க வைப்பார் இந்த லிங்கா ஸ்வாமிஜி!     
 
கமல்: அவருடைய கனவுப் படமான  ‘மருதநாயகம்’ கெட்-அப்பில் கிரேசி மோகன் டயலாக்கில் காமெடிப் படத்தை இயக்கிக்கொண்டிருப்பார். ‘இந்தப் படத்தோட பேரு புசாவதாரம்... நான் ஆஸ்காருக்கு இந்தப் படத்தை அனுப்பப் போவதில்லை. ஆஸ்கார் என்பது இங்கு ஒரு மாய விளையாட்டு. ஆனாலும் ஆஸ்காரை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் தந்தால் நல்லா இருக்கும் என்றுதான் சொல்கிறேன்’ என பேட்டி எடுப்பவர்களின் போட்டியை உருவிக்கொண்டிருப்பார்! 
 
கலைஞர்: யாருமில்லா ஒரு தனித்தீவில் ஹாயாக கரீபியன் தீவின் பனியனும் பெர்முடாஸையும் போட்டுக்கொண்டு, ‘பனியனோடு திரிவது தவம்... தனியனாக இருப்பது சுகம். சனியனாக குடும்பம் வராதவரை’ என மொக்கை ரைமிங் கவிதை சொல்லி சூரியனையே வியர்க்க வைத்தபடி மணலில் மல்லாந்து படுத்துக்கிடப்பார்!
 
ஜெயலலிதா: கேஸ் எதுவும் இல்லாத விறகு அடுப்பில் சமையல் செய்தபடி ஓர் ஓலைக் குடிசையில் நிம்மதியாக நெல்லுச்சோறு சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை குனிந்தபடி இவர் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகள் வயலில் மேய்ந்துகொண்டிருக்கும்!
  
விஜய்: ஒருநாள் முதல்வர் படத்தை அர்ஜூனுக்குப் பதில் இவர் நடித்து முழுநீளப் படமாய் ஓடிக்கொண்டிருக்கும். சங்கவியோ சுவாதியோ கலைராணி கேரக்டரில் அம்மாவாக ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஒரே ட்விஸ்ட்டாய் க்ளைமாக்ஸில், கருப்புக் கம்பளி போர்த்தி, ‘தம்பி கொஞ்சும் நில்லுப்பா... தப்பிருந்தா சொல்லுப்பா’ என்று தன்முன் பாட்டு பாடும் புது வில்லனை போட்டுத் தள்ளி சென்னையை வல்லரசாக்கி இருப்பதோடு ‘எ ஃபிலிம் பை ஷங்கர்’ டைட்டில் ஓடும்!   
அஜித்: ஆல் இந்தியா பெர்மிட் லாரியில் தலப்பா கட்டி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு சிங் டிரைவராய் இருப்பார். ராஜஸ்தானில் செக் போஸ்ட் ஒன்றில் இவரை வழிமறிக்கும் போலீஸிடம், ‘என் வாழ்க்கையில ஒவ்வொரு கிலோ மீட்டரும், ஒவ்வொரு ஸ்டேட்டும், ஒவ்வொரு ஊரும் நானா டிரைவ் பண்ணதுடா! .****** யூ ’ என கெட்ட வார்த்தை பேசியபடி இந்த லாரி டிரைவர் ரேஸ் விட்டிருப்பார்!
 
கேப்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்ணீரோடு கதறிய வண்ணம் இருக்க எதிரே நம்ம கேப்டன் மிலிட்ரி உடையில். ‘பாகிஸ்தான்ல தீவிரவாதிகளோட எண்ணிக்கை பத்தாயிரத்து நானூத்தி பன்னிரெண்டு பேரு... அதுல தினமும் குளிக்கிறவன் நாலாயிரத்து இருபத்தி ஆறு பேரு... அதுல... ’ என நாள் முழுக்க புள்ளி விபரம் சொல்லி கதறவிட்டிருப்பார்!
 
- ஆர்.சரண்-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close