Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்காவின் மறக்க முடியாத நாள்!

குணசேகரன் இயக்கத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, கேத்ரீன் தெரசா, மற்றும் நித்யா மேனன் நடிப்பில் கோடை விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘ருத்ரமாதேவி’. படத்திற்கு இசை இளையராஜா.

இப்படத்திற்கு இசையமைக்கும் இளையராஜாவை சமீபத்தில் அனுஷ்கா சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.  முன்னதாக இளையராஜாவுக்கு மலர்கொத்து கொடுத்த அனுஷ்கா அவரிடம் ஆசீவாதங்கங்களை பெற்றார். சிறுவயது முதலே இளையராஜாவின் தீவிர ரசிகையான அனுஷ்கா. அவரை சென்னையில் பிரத்யேகமாக சந்தித்துள்ளார்.

இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அனுஷ்கா பின் இது தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என கூறி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் பிறகு பேசிய இளையராஜா விரைவில் இப்படத்தின் பின்னனி இசைக்காக லண்டன் செல்லவிருப்பதாக இளையராஜா கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close