Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் உருவாகிறதா அக்னி நட்சத்திரம்?

'கழுகு' படத்தின் மூலம் அறியப்பட்ட கிருஷ்ணா மற்றும் வைபவ் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். ஏப்ரல் 2ம் தேதி இப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெறவுள்ளது.

கிருஷ்ணாவிற்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களாகவே அமைகிறது. விஜய்சேதுபதியுடன் ’வன்மம்’, மா.கா.பா.ஆனந்துடன் ’வானவராயன் வல்லவராயன்’ மற்றும் ஆர்யாவுடன் ’யட்சன்’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது வைபவுடன் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ’கிரகணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் இருவருக்குமே சரிசமமான கதாப்பாத்திரமாம். அதுமட்டுமில்லாமல் இருவருமே எதிரெதிர் வேடங்களில் நடிக்கிறார்களாம். மணிரத்னம் இயக்கிய ’அக்னிநட்சத்திரம்’ படத்தில் பிரபு-கார்த்திக் வேடம் போலவே அமையலாம் என்று எதிர்பாக்கப்படுகிறதாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்