Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எந்த ஜாதியையும் குறிப்பிடவில்லை - ’கொம்பன்’ படம் குறித்து ஸ்டூடியோ க்ரீன்!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ் கிரண், கோவை சரளா, மற்றும் தம்பி ராமையா நடிப்பில் வெளியாக உள்ள படம். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். படம் வரும் ஏபரல் 2ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தில் குறிப்பிட்ட இரு ஜாதிகளை தவறாக காட்டியுள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட ஜாதி கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணைகளும் சிறப்பு திரையிடல்களும் நடந்து வரும் நிலையில் , தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் இதுகுறித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் எந்த ஜாதியையும் குறித்து வசனங்களோ, காட்சிகளோ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமன், மருமகனுக்கு இடயே நடக்கும் பாசப் போரட்டம். குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தியோ, தாழ்த்தியோ எந்த ஒரு கருத்தும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்.

யூகத்தின் அடிப்படையில் ’கொம்பன்’ திரைப்படம் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் அடிப்படையற்றவை என்பது படம் வெளியானதும் தெரியவரும். பல கோடி செலவில் பலரது கடும் உழைப்பில் உருவாகியுள்ள ‘கொம்பன்’ திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என ஸ்டூடியோ க்ரீன் கே.இ. ஞானவேல்ராஜா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்