Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகிழ்ச்சியில் ஆர்யா, விஷால், விஷ்ணு!

“பிறவி” படத்தின் ப்ரோமோ பாடலுக்காக ஆர்யா, விஷால் மற்றும் விஷ்ணு ஆகிய மூவரும் விக்ராந்துடன் இணைந்து நடனம் ஆடுகின்றனர்.

விக்ராந்த் கதாநாயகனாக நடித்துவரும் படம் “பிறவி” இப்படத்தை விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அருள் தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, அபிநயா, பார்வதி நிருபன், லீமா ஆகியோரும் உடன் நடிக்கின்றனர். 

“பிறவி” படத்தின் ப்ரோமோ பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. தக தக என தொடங்கும் அப்பாடலுக்கு விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷால், விஷ்ணு ஆகிய மூவரும் நடனம் ஆடிகிறார்கள்.

த்ரில்லர், ஆக்‌ஷன், ரொமான்ஸ் கலந்த ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரையான வாழ்க்கைதான் பிறவி படத்தின் கதை, இப்படத்திற்கு ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

விஷால் மற்றும் விஷ்ணு இருவருமே தாங்கள் இணைந்து ஆடியதை  ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close