Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ காதல் கண்மணி இசை வெளியீடு !

'கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் “ஓ காதல் கண்மணி”.இப்படத்தின் இசை ஏப்ரல் 4ம் தேதி வெளியாகவிருக்கிறது.

துல்கர் சல்மான் மற்றும் நித்யாமேனன் இருவரின் நடிப்பில் காதலும் காதல் சார்ந்த படமாக உருவாகிறது “ ஓ காதல் கண்மணி”. மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு தமிழில் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரகாஷ் ராஜ், கனிகா இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் 5 பாடல்களை வைரமுத்துவும், 3 பாடல்களை மணிரத்னமும், ரஹ்மானும் இணைந்து எழுதியுள்ளனர்.

சமீபத்தில் ஓ காதல் கண்மனி படத்தின் டீஸர் டிரெய்லர் மற்றும் மென்டல் மனதில் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் பாடல் வெளியாக விருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி பாடல்கள் வெளியாகும் என்று மணிரத்னம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணிரத்னம் டீம் என்றாலே படத்தின் பாடல்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 4ம் தேதி இசை வெளியாவதையொட்டி பிரத்யேக அறிவிப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆடியோ ப்ரோமோ வீடியோ:

MUST READ

எடிட்டர் சாய்ஸ்