Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பையிலிருந்து வருகிறார் அஜித்துக்கு வில்லன்

’என்னை அறிந்தால்’ படத்தையடுத்து அஜித் மீண்டும் ‘வீரம் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இசை அனிருத். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருக்கிறார். இதை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்திருந்தார். அடுத்த கட்டமாக அஜித்தின் வில்லன் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

பாலிவுட் நடிகர் கபீர் சிங் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார், இவர் தெலுங்கில் கோபிசந்த் நடித்த ‘ஜில் , ரவி தேஜா நடிப்பில் ‘கிக்2’ என இரு படங்களில் சமீபத்தில் வில்லனாக நடித்து தென்னிந்திய மொழிகளுக்கு ஏற்கனவே பழக்கமாகிவிட்டார்.

அஜித்தின் 56வது படம் மூலம் இப்போது தமிழ் மொழியிலும் எண்ட்ரீயாக உள்ளார். அஜித் விஜய் படங்கள் என்றாலே வில்லன் கேரக்டருக்கு அதிகமான முக்கியத்துவம் இருக்கும் . எனவே இந்த படத்திலும் வில்லன் பாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close