Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படம் ஓடலைனா, பணம் ரிட்டர்ன்!

சினிமாவில் இப்போது புது டிரெண்ட் உருவாகிவருகிறது. ஒரு ஷோ ரீலை எடுத்து ‘இதுதான் பாஸ். நாங்க டைரக்ட் பண்ணப் போற படத்தோட ஜானர். இப்பிடித்தான் முழு ஸ்க்ரிப்ட்டும் யோசிச்சு இருக்கோம். பணம் மட்டும் இருந்துச்சுனா பட்டையைக் கௌப்பிடுவோம். அப்புறம் என்ன...? உங்களால முடிஞ்ச உதவியைப் பண்ணுங்க. இதோ இதுதான் எங்க அட்ரஸ்’  இப்படி கிரவ்டு ஃபண்ட் கோரிக்கையுடன் இணையதளம் வாயிலாகவும் சோஷியல் மீடியாக்கள் வாயிலாகவும் தயாரிப்பாளர்கள் தேடுவதுதான் ஹாட் டிரெண்ட். ஆனால் ‘பேர்ஃபுட் டு கோவா’ என்ற பாலிவுட் படம் அப்படியே உல்டா.

உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும் கவனத்தையும் வாரிக்குவித்தாலும் இந்தியாவில் ரிலீஸுக்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறது. பொறுத்துப் பார்த்த படத்தின் இயக்குநரும் இணைத் தயாரிப்பாளருமான பிரவின் மோர்ச்சலே ‘ரீஃபண்டபிள் பிரவ்டு ஃபண்டிங்’ (REFUNDABLE PROUD FUNDING) என்ற பெயரில் 50 லட்சம் வசூல் செய்திருக்கிறார்.

‘‘கிரவ்டு ஃபண்டிங்கைப் பொறுத்தவரை பலரும் அளிக்கும் பணத்தில் படம் தயாரிக்கப்படும். லாபம் வந்தால், எல்லோருக்கும் சரி சமமான பங்கு. ஆனால் படம் நஷ்டம் அடைந்தால், பணம் திரும்பக் கிடைக்காது. ஆனால் என்னுடைய திட்டத்தின்படி படத்தின் லாபத்தில் வரும் பணத்தை சரி சமமாகப் பிரித்துக் கொடுப்பதோடு, ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால், அனுப்பிய பணத்தையாவது திருப்பி அனுப்புவேன். இதற்காக சட்டப்படி முறையான ஒப்பந்தத்தையும் போட்டுள்ளேன்’’ என்கிறார் பிரவீன்.

இணையத்தில் தன் செல்போன் நம்பர், இமெயில் ஐடி எல்லாவற்றையும் கொடுத்து இருந்தார் பிரவீன். ஆச்சர்யமாக 45 நாட்களில் 50 லட்சம் ரூபாய் வசூல். 1,000 ரூபாயில் ஆரம்பித்து அதிகபட்சமாக 10 லட்சம் வரை தனி நபர் பணமாகக் கொடுத்து உதவி இருக்கிறார்கள். இதுவரை 238 பேர் 18 நாடுகளில் இருந்து பண உதவி செய்திருக்கிறார்கள். படத்தின் தியேட்டர் ரிலீஸ் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். வரும் ஏப்ரல் 10-ம் தேதி நாடெங்கிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 100 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகிறது. 

படத்தின் கதை இதுதான். 11 வயது சிறுவனும் அவனுடைய 9 வயது தங்கையும் வீட்டைவிட்டு வெளியேறி தங்கள் பாட்டியைத் தேடிப் பயணிக்கிறார்கள். ரயில், பஸ், மாட்டுவண்டி, லாரி, ஆட்டோ, சைக்கிள், நடைப் பயணம் என அவர்கள் பயணத்தின் ஊடாக சந்திக்கும் மனிதர்களும், அடையும் கலவையான அனுபவங்களுமே கதை. பாட்டியைக் கண்டுபிடித்தார்களா இல்லையா? அவர்களுக்கு என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ். உலகத்தரத்திலான ஒளிப்பதிவும் இயக்கமும் சினிமா என்பதைத் தாண்டி டாக்குமென்ட்ரி உணர்வைக் கொடுக்கிறது. நகரத்து வாழ்க்கை முறைக்கும் கிராமத்து வாழ்க்கைமுறைக்கும் இடையே உள்ள மலை அளவு வித்தியாசம், சிறுவர்களின் பார்வையில் எத்தகைய தாக்கத்தை மனதில் ஏற்படுத்துகிறது என்பதை 80 நிமிடங்களில் கவிதையாக செதுக்கி உள்ளார் இயக்குநர்!

- ஆர்.சரண்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close