Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீரியஸ் காட்டும் உதயநிதி!

ஜெகதீஸ் இயக்கத்தில் உதயநிதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் நண்பேன்டாஉலகம் முழுவதும் இந்தப் படம் கிட்டதட்ட 650 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

இன்று தனது பட வெளியீட்டை அடுத்து  உதயநிதி தனது அடுத்த படமான ’கெத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் உதயநிதி இதில் ரொம்ப சீரியஸாக அதிலும் கருப்பு , வெள்ளை போஸ்டரில், குருந்தாடி சகிதமாக தோற்றமளிக்கிறார். இந்தப் படத்தையும் அவரது ரெட்ஜெயன்ட் மூவீஸ்தான் தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறார் திருக்குமரன் . இவர், ’மான் கராத்தே’ படத்தை இயக்கியவர். ’கெத்து’ படத்தில் உதயநிதி ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

படத்தில் அவருடன் முதல் முறையாக காமெடி கூட்டணியில் நடிக்கிறார் கருணாகரன். வழக்கம்போல் இசை ஹாரிஸ் ஜெயராஜ்தான். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மேலும் இது முற்றிலும் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close