Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குபீர் சிரிப்புடன் கூடிய தலைப்புகள் -நட்டியின் அடுத்த வேட்டை!

’சதுரங்க வேட்டை’ படத்தின் வெற்றி நட்ராஜ் தமிழ் சினிமாவின் சிறப்பான நடிகராகவும் உயர்த்தியுள்ளது. சென்ற வருடம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற படம் . மேலும் பலரும் நட்டியைத் தவிர்த்து இப்படத்தை வேறு யாரும் நடிக்க முடியாது என்னும் அள்விற்கு படம் ஹிட்டானது.

தற்போது நட்ராஜ் விஜய் நடிக்கும் ‘புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் இரண்டு இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இது தவிர்த்து நான்கு படங்களில் நடிக்கவும் இருக்கிறார்.

இந்த நான்கு படங்களில் இரண்டு படங்களை கேட்டவுடனேயே சிரித்து விடுவோம், ஒரு படத்திற்கு ‘குண்டு இட்லி, கேர் ஆஃப் கும்பகோணம்’ மற்றொன்று ’உத்தரவு மகாராஜா’. இதில் முதல் டைட்டில் தமிழ் இல்லை என மாற்றமாகலாம். எனினும் இதே பெயர் வைத்தால் கண்டிப்பாக மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

இப்போதெல்லாம் ஒரு படத்திர்கு பெயர் வைப்பதிலேயே ஒரு படத்தின் மொத்த வெற்றியும் ஆரம்பித்துவிடுகிறது. எனவே தான் சமீபகாலமாக சில மாஸ் ஹீரோக்களின் படங்களின் தலைப்புகள் கூட ரகசியம் காத்து பின்னர் பிரத்யேகமாக வெளியிடுகின்றனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close