Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுரேஷ் ரெய்னா- பிரியங்கா 'மேட் ஃபார் ஈச் அதர்'!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பால்யதோழியான பிரியங்கா சவுத்ரியை மணம்முடிக்கிறார்.பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்த போதிலும் சுரேஷ் ரெய்னாவும் பிரியங்காவும் இளம்பருவத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.

காஷ்மீரை சேர்ந்த சுரேஷ் ரெய்னாவின் குடும்பம் 1980ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்துக்கு குடிபெயர்கிறது. உத்திரபிரதேச மாநிலம் பாரவுட் பகுதியை சேர்ந்த பிரியங்கா குடும்பம் மீரட்டில் குடியேறியது. இவர்கள் இருவரின் தந்தையும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள்.அதோடு நெருங்கிய நண்பர்களும் கூ. இருவரின் தாயாரும் நெருங்கிய தோழிகள். 'மேட் ஃபார் ஈச் அதர்' போல இருவரும் பிறந்து வளர்ந்தவர்கள்.

பிரியங்கா சவுத்ரி காசியாபாத்திலேயே பி.டெக் படித்தார். இவரது சகோதரர்கள் அபிஷேக் சவுத்ரி, விவேக் சவுத்ரி இருவரும் கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள். இதில் அபிஷேக் சென்னையில் பணிபுரிகிறார்.

சாப்ட்வேர் பெண்கள் போல பிரியங்காவும் முற்போக்கு சிந்தனைவாதிதான். முதலில் பெங்களுருவில் வேலை பார்த்தார். பின்னர் நெதர்லாந்தில் ஆம்ஸ்ட்ராங் வங்கியில் பணிபுரிந்து வந்தார். தற்போது சுரேஷ் ரெய்னாவுக்காக வேலைக்கு முழுக்கு போட்டு விட்டார்.

நடிகை ஸ்ருதிஹாசனுடன் சுரேஷ்ரெய்னாவுக்கு காதல் என்று வதந்திகள் கிளம்பின. ஆனால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பிரியங்காவுடனான திருமணம்.

திருமணம் முடிந்த கையோடு சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்சுக்காக விளையாட வருகிற 11ஆம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. சென்னை ஸ்டேடியத்தில் இனிமேல் பிரியங்காவையும் பார்க்கலாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close