Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துவங்கியது ’கிரகணம்’!

பிவிபி சினிமா அறிமுக இயக்குநர் இளன் இயக்கும் 'கிரகணம்' திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், புதுமுகம்  நந்தினி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மற்றும் கருணாஸ் , கருணாகரன் 'கயல்' சந்திரன், ‘மெட்ராஸ்’ கலையரசன்  முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
 
“ ‘கிரகணம்’ கோள்களின் இடமாற்றம் என்று சிலரும், ஒவ்வொரு மனிதனின் நல்லதும், கெட்டதும்  இதை மையாமாகக் கொண்டே அமைகிறது என்றும் சிலரும் நம்புவது உண்டு. அவ்வகையில் சந்திர கிரகணத்தால் சிலரது  வாழ்க்கையில் ஏற்படும் நல்லது கேட்டதை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் திரைப்படம் தான் ‘கிரகணம்’. பிவிபி சினிமா தயாரிப்பில் என்னுடைய முதல் படத்தை இயக்குவதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. மேலும், இப்படத்தின் படபிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது.“,எனக் கூறியுள்ளார்அறிமுக இயக்குநர் இளன்.           
 


முழுக்க முழுக்க இளைஞகர்களை  கொண்டுள்ளது 'கிரகணம்' படக் குழு.  ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றுகிறார். படத்திற்கு இசை சுந்தர மூர்த்தி. படத்தொகுப்பு மணி குமரன் . IB கார்த்திகேயன் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்ள , சசி குமார்  நிர்வாக தயாரிப்பு பணியை செய்கிறார். பிக் ப்ரிண்ட் பிக்சர் சார்பில் ஷோபன் பாபு தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறார். பரம் V பொட்லூரி இப்படத்தை தயாரிக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close