Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்தவரின் சந்தோஷத்தை பறிப்பதில் இல்லை மகிழ்ச்சி!

றிபோன வேலை அதை சுற்றிய கதை நகர்வு தான் ‘ டூ டேய்ஸ் ஒன் நைட்’. லுஸ் டார்டென் மற்றும் ஜியென் டார்டென் இயக்கத்தில் பெல்ஜியத்தில் வெளியான சாதாரண வாழ்கையின் பிரதிபலிப்பு தான் இந்தப்படம். கேன்ஸ் திரைப்பட விழா, சிட்னி திரைப்பட விழா , முனிச் திரைப்பட விழா, நார்வேஜியன் திரைப்பட விழா, நியூயார்க் திரைப்பட விழா, மில்லி வேலி , டெல்லுரைட் , சிகாகோ ,வல்லடோலிட் என பல ஊர்களில் திரைப்பட விழாக்களை கடந்து கடைசியில் சென்னை திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுவிட்டது. 

நேசித்து செய்த வேலை பறிபோக மெத்தையில் விழுந்து அழும் சாண்ட்ரா ,  அதே நேரத்தில் கணவனின் வேலையும் பறிபோக குடும்ப செலவு, இரு குழந்தைகள், என்ன செய்ய போகிறோம் என கையை பிசைந்து வரும் தருணத்தில் மொபைல் அழைக்கிறது. 

சாண்ட்ரா பெல்ஜியமின் சோலார் பேனல் தொழிற்சாலையில் வேலை செய்யும் இளம் தாய். மற்ற சீனியர் வேலையாட்களின் ஷிஃப்டுகளை சரி செய்வதற்காக வேலை பார்த்து வந்தவர். ஒரு காட்டத்தில் நிர்வாகம் சாண்ட்ராவை வெளியேற்றி விட்டு அவரது சம்பளத்தை போனசாக மாற்றி மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு ஒரு மணிநேரம் அதிக வேலை வாங்கி விட திட்டமிடுகிறது. இதற்கு ஒருவேளை மற்றவர்கள் போனஸ் வேண்டாம் , சாண்ட்ராவை இணைத்துகொள்ளுங்கள் என குறிப்பிட்ட நாளில் வாக்களித்தால் சாண்ட்ரா வேலையில் மீண்டும் சேர்ந்து விடுவார், மாறாக போனஸ் வேண்டும் என்று வாக்களித்தால் சாண்ட்ராவின் வேலை பரிபோகும். 

விடுமுறையாக கிடைத்த இரண்டு நாட்களில் பணிபுரியும் ஒவ்வொருவரின் வீட்டிலும் வாக்களிப்பிற்காக பிச்சை எடுக்காத குறையாக அலைகிறார் சாண்ட்ரா. ஒரு கட்டத்தில் வேலை செய்பவர்களுக்கும் சாண்ட்ரா இல்லாத நாட்களில்தான் தங்களது வேலை பளுவையும், நேரத்தையும் சமாளிக்க முடியாது திணற துவங்குகின்றனர். அதனால் ஒரு சிலர் வாக்களிக்க ஒப்பு கொள்கின்றனர். இரண்டு நாட்கள், ஒரு இரவு தன்னுடைய வேலையை தக்கவைப்பதற்காக சக பணியாளர்களைத் தேடிச்செல்வதே மீதி கதை. 



ஒரு காட்சியில் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணின் வீட்டில் சென்று நிற்கும் தருணத்தில் அப்பெண் உள்ளே வா என சாண்ட்ராவை அழைக்கிறார், நான் இங்கேயே இருக்கிறேன் என சாண்ட்ரா சொல்லும் தருணங்களில் பார்வையாளர்களின் மனம் கணமாக்கும். அப்பெண்ணுக்கும் வாக்களிக்க விருப்பம் என்றாலும் அவரது கணவன் மறுக்கவே நான் பேசி விட்டு போன் செய்கிறேன் என சாண்ட்ராவை அனுப்பி வைக்க முயல்கிறாள், இதை அப்பெண்ணின் கணவர் இதை வெளியில் வந்து பார்த்து விடுகிறார். கண்டபடி பேசி சாண்ட்ராவை திருப்பி அனுப்ப நொடிந்த நெஞ்சோடு திரும்பும் சாண்ட்ரா, தூக்க மாத்திரைகளை விழுங்கிவிடுகிறார். அந்நேரத்தில் தன் கணவனிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்ன தோழி, உனக்கு வாக்களிக்கிறேன் என கூறுகிறாள். அவசரப்பட்டு தான் மாத்திரைகளை விழுங்கியதை கணவனிடமும், தோழியிடமும் கூறுகிறார் சாண்ட்ரா, அடுத்தக் காட்சி மருத்துவமனையில் நீளுகிறது.  

இரவு தாமதமாகி விடுகிறது. உன் வீட்டில் விட்டுவிடுகிறேன் என்று தோழியிடம் கூறுகிறார் சாண்ட்ரா, “தேவையில்லை அவரை நான் விட்டுவிட்டேன். அவரை புரிந்துகொள்ள இதுதான் சரியான தருணமாக பட்டது, எனது சம்பாத்யத்தை மட்டுமே அவர் பெரிதாக எண்ணினார் , எனவேதான் அவரை உதறிவிட்டேன்” என கூறி சிரிக்கும் போது சாண்ட்ராவை தாண்டி மனதில் நிற்கிறார் அவரது தோழி. 

வாக்களிக்கும் நாளும் வருகிறது. அவள் எதிர்பார்த்தபடி வாக்குகள் விழுகின்றன. மேலாளர் சாண்ட்ராவை அழைத்து உனக்கு மற்றவர்கள் கொடுத்த வாக்குகள் மூலம் நீ மீண்டும் பணியில் நீடிக்கலாம். மற்றவர்களுக்கும் போனஸையும் அளிக்கிறேன். ஆனால் ஏற்கெனவே ஒருவரின் வேலையை புதுப்பிக்க வேண்டியுள்ளது அவரை வெளியில் அனுப்பிவிட்டு உன்னை வேலையில் நிரந்தரமாக்குகிறேன் என கூறுகிறார். சற்று நேரம் அமைதி காக்கும் சாண்ட்ரா , ஒரு முடிவாக ’நன்றி,குட்பை’ என்ற வார்த்தையை சொல்லிவிட்டு வெளியில் நடக்க, அவரது அம்மாவிடம் இருந்து போன் வருகிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நிம்மதியான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நடக்கிறார் சாண்ட்ரா.  எண்ட் கார்டு விழுகிறது. 

ஒருவர் தனது சின்ன தேவையை இழந்து மற்றொருவரின் பெரிய தேவையை சரிசெய்யலாம், ஆனால் இன்னொருவரின் வாழ்க்கையை சிக்கலாக்கி நம் வாழ்வை நலமாக வாழ்வதில் பயனில்லை என கருத்து சொல்கிறது ,இந்த ‘டூ டேய்ஸ் ஒன் நைட்’. சாண்ட்ராவாக படம் முழுக்க சோகம் தாங்கி நடித்துள்ளார் மரியான் காட்டில்லார்ட், அவருக்கு கணவராக ஃபேப்ரியோ ரோங்கியொன் நடித்துள்ள இப்படத்தில் கலர்ஃபுல் காட்சிகளோ, பிரம்மாண்ட செட்டிங்குகளோ, கண்ணை கவரும் ஆடை மற்றும் மேக் ஆப்களோ எதுவும் இல்லை. ஆனால் படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி நியூட்டன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close