Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படம் தயாரிக்க போகிறார் சிம்ரன்..

புதிய சினிமா பட நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகை சிம்ரன், விஜய், அஜித் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

சினிமாவில்  10 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் நடிகை சிம்ரன், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் ஆகிய முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள சிம்ரன், தற்போது புதிதாக 'சிம்ரன் அண்ட் சன்ஸ்' என்ற பட நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளார்.

இது குறித்து நடிகை சிம்ரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தை கொண்டுள்ளது. என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாக அமைந்தது. நான் நடிகையாக இருந்த அனுபவமும், நான் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்த அனுபவமும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது.



இந்த ஆண்டு இரண்டு படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். என் முயற்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு தருவார்கள். தயாரிப்பாளர், இயக்குனர் என்ற எனது இந்த முயற்சியையும் அனைவரும் ஆதரிக்கும் வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

முதல் கட்டமாக சிம்ரன் அண்ட் சன்ஸ் பட நிறுவனத்தில் கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரின் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close