Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்யாணராமன் கெட்டப்பில் த்ரிஷா?

1979ம் ஆண்டில் ரங்கராஜன் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்து வெளியான படம் ‘கல்யாணராமன்’. இப்படத்தின் அடுத்த பாகம் தான் ‘ஜப்பானில் கல்யாணராமன்’.

தற்போது இப்படம் ரீமேக்காக உள்ளது. இதில் கமல் நடித்த வேடத்தில் த்ரிஷா நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க அண்ணன் , தம்பி என்ற கதை அக்கா, தங்கை என்ற கோணத்தில் பயணிக்க உள்ளது. ஒரு த்ரிஷா பெரிய பல்லுடனும், வெகுளியாகவும் , இன்னொரு த்ரிஷா மாடர்ன் ஸ்டைலிஷாகவும் நடிக்க இருக்கிறார்.

 

படத்தை த்ரிஷாவின் மேனேஜர் கிரிதரன் இயக்க இருக்கிறாராம். எனினும் இதற்கு உரியவர்களிடம் ஒப்புதல் வாங்கிவிட்டார்களா? என்பதே கோலிவுட் மக்களின் கேள்வி.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close