Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அனுமதி பெற்றுவிட்டு தான் தலைப்பு வைத்தோம்’ பாயும் புலி தலைப்பு குறித்து விஷால் பதில்!

விஷால் சினிமாவிற்குள் நுழைந்து 10 ஆண்டுகள் நிறவானதையடுத்து அதற்கான ரசிகர்கள் கூட்டம் நடைபெற்றது .அக்கூட்டத்தில் தற்போது நடித்துவரும் ‘பாயும் புலி’ குறித்து அவர் பேசினார் , முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்றுமுதல் இரண்டாம் கட்டப் பிடிப்பு தொடங்கி விட்டது. . 'பாயும்புலி' ரஜினிசார் தலைப்பு, இந்த தலைப்பை ஏவிஎம்மில் தடையில்லா சான்று பெற்று அனுமதி வாங்கிவிட்டுத்தான் எடுக்கிறோம். 'பாயும்புலி' தலைப்புக்கு ஒரு பலம் இருக்கிறது. அதற்காகவே வாங்கினோம்.



காஜல் அகர்வாலுடன் எனக்கு முதல்படம். இயக்குநர் சுசீந்திரனுக்கு 2 வது படம்.  மதுரை சுற்றிய கதை. இதுவும் ஒரு போலீஸ் கதைதான். ஆனால்  வழக்கமாக இருக்காது. எப்போதும் சுசீந்திரன் நடுத்தர வர்க்கம் பற்றி பேசுபவர் சிந்திப்பவர். அது எனக்குப் பிடிக்கும். இந்தப்படமும் நடுத்தர வர்க்கம் பற்றிய கதைதான்.

இசை இமான். மதுரை பின்னணியில் 'பாண்டியநாடு' படம் பார்த்து இருக்கிறார்கள். இதையும் பார்க்கப் போகிறார்கள். நிஜ சம்பவங்களும் நிஜமுகங்களும் பார்க்கலாம் ஒரு நிஜ ரவுடியும் நடிக்கிறார். செப்டம்பர் 17ல் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close