Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல்ஹாசனின் ’உத்தமவில்லன்’ படத்திற்கு தடை கோரி மனு!

கமல்ஹாசன் நடித்துள்ள உத்தமவில்லன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி, காவல்துறை ஆணையரிடம், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில், ''நடிகர் கமல்ஹாசன் மற்றும் எம்.லிங்குசாமி இணைந்து வழங்கும்,  ரமேஷ் அரவிந்த் இயக்கி வெளிவர இருக்கும் உத்தம வில்லன் என்ற திரைப்படத்தில் இந்து மதக் கடவுளான பெருமாளின் அவதாரங்களான தசாவதாரத்தை விமர்சித்து இருப்பதை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.



பக்த பிரகலாதன், அவரது தந்தை இரணியன் உடனான உரையாடலை, வில்லு பாட்டாக 'என் உதிரத்தின் விதை...' என்னும் தொடங்கும் பாடல் வரியில் மிகைப்படுத்தி, பெருமாள் அவதாரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் அமைந்துள்ளது. இது கோடிக்கணக்கான பெருமாள் பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயல்.

தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களால் தன்னை நாத்திகனாக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தை திரையிட்டால் இந்துக்களின் மனம் புண்படுத்தும் விதமாக அமையும். எனவே, அந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டுகிறோம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close