Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா

மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்று, எரிச்சல் போன்ற பலவிதமான ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான நாப்கின் ஒன்றை, ‘வனிஷா’ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

சென்னை ஹையாட் ரீஜென்சியில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பேசியதாவது... ‘‘மனதில் ஏற்றுக் கொண்ட ஒன்று சில நேரங்களில் வார்த்தையாக வர மறுக்கும். அதுபோல் தான் பெண் சமுதாயம் முன்னேறி விட்டது என வார்த்தைகளில் சொல்லும் நமக்கு, இன்னும் அதை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடு தான்  இன்றும் கூட மாதவிடாய் நேரங்களில் பெண்கள் தீண்டத்தகாதவர்களாக தள்ளி வைக்கப்படும் அவலம்.

இங்குள்ள எத்தனை கணவர்களுக்கு தன் மனைவி மாதவிடாய் நேரங்களில் படும் அவஸ்தை புரியும்? கர்ப்பப்பைவாய் புற்றுநோயினால் இந்தியாவில் அதிகமான பெண்கள் இறக்க நேரிடுகிறார்கள் என்கின்றன சர்வே முடிவுகள். இதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி பேசும் நாம், அதைத் தடுப்பதற்கான வழிமுறையைப் பற்றி யோசிக்க மறந்து விட்டோம்.

மாதவிடாய் பற்றிய சரியான புரிதலை அனைத்துப் பெண்களிடமும் ஏற்படுத்தினால் அதுவே இந்த நோயை பாதி அளவில் தடுத்துவிடும்.

இரவு 12 மணிக்கு கூட வெளியே செல்ல பெண்களுக்கு தைரியம் வந்துவிடும் போல... ஆனால் தான் பயன்படுத்தும் ஒரு நாப்கினை கடைக்குச் சென்று வாங்க நம் பெண்கள் தயங்குகிறார்கள். இதில் மறைப்பதற்கும், வெட்கப்படுவதற்கும், அசிங்கப்படுவதற்கும் என்ன இருக்கிறது?

பெண்மையைப் போற்றும் யாருக்கும் மாதவிடாய் என்பது மறைப்பதற்கான விஷயமாகத் தோன்றாது.’’ என்ற ஆண்ட்ரியா இறுதியாக, பெண்மையைப் போற்றும் விதத்தில் எழுதப்பட்ட நா.முத்துக்குமாரின் வரிகளைப் பாட... “பூவின் வாசம் பெண்கள் தானே... புயலின் வேகம் பெண்கள் தானே...” என இன்னிசையுடன் முடிந்தது விழா.

க.தனலட்சுமி,

படங்கள்: அ. பார்த்திபன்

(மாணவப் பத்திரிகையாளர்கள்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close