Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தமவில்லன் தேதி அறிவிப்பு!

கமல்ஹாசன், ஜெயராம், ஊர்வசி, ஆண்ட்ரியா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் உத்தமவில்லன். படத்திற்கு “யு” சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படம் மே1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கமலின் ராஜ் கமல் இண்டர்நெஷனல் மற்றும் லிங்கு சாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் உத்தமவில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க பல்வேறு தடங்களுக்கு நடுவில் சென்சார் பார்வைக்குச் சென்றது.

யு சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து மே 1ல் உத்தமவில்லன் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கே.பாலசந்தர் நடித்த கடைசி படம் என்பதால் இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ வை ராஜா வை”. நேற்று சென்சாருக்கு சென்றது. அதுவும் யூ சான்றிதழ் பெற்றதன் பின் ஐஸ்வர்யா தன்னுடைய ட்விட்டரில் “ படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பேன், கோடையில் ரிலீஸாகும்’ என்று அறிவித்தார். மேலும் அருண் விஜய்யின் ‘வா டீல்’ படமும் இதே மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘ரஜினி முருகன்’ படமும் வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளது.

தனுஷ் நடித்த “3” படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close