Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரிஷா இடத்தில் டாப்ஸி! தயாரிப்பு வருண்மணியன்

ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் திரு இயக்கவிருந்தார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என செய்திகள் வெளியாகின. ஆனால் த்ரிஷாவிற்குப் பதிலாக தற்போது டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார்.

'நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திருவின் அடுத்தப்படத்தை த்ரிஷாவின் வருங்கால கணவர் வருண்மணியன் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் த்ரிஷா, தன்னுடைய மேனஜர் தயாரிக்கவிருக்கும் ’கல்யாணராமன்’ ரீமேக் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்ததால் த்ரிஷாவால் திரு இயக்கும் படத்தில் நடிக்கமுடியவில்லையாம். ஆனால் இப்படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க வேண்டும் என்பதே வருண்மணியனின் ஆசையாம்.

இறுதியில் ஜெய்க்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கவுள்ளார் என்று படத்தின் இயக்குநர் திரு கூறியுள்ளார். மேலும் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும்,  படப்பிடிப்பில் டாப்ஸி கலந்துகொள்வார் என்றும் கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close