Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துவங்கியது அஜித் படம் - ட்ரெண்டான ’தல56’ !

’என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை வீரம்’ சிவா இயக்க இருக்கிறார். சமீபத்தில் அஜித் - ஷாலினி ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததையடுத்து குழந்தையுடனும், மனைவி ஷாலினியுடனும் நேரத்தை செல்விட்ட அஜித் மீண்டும் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்க இருக்கிறார்.

இந்நிலையில் அஜித்தின் 56 வது படத்தின் படத்துவக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இதில் வீரம் சிவா, படத்தி இசையமைப்பாளர் அனிருத், மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஸ்டண்ட் சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’, இப்போது ‘தல56’ ஹிட் காம்போ என ட்விட்ட் செய்துள்ளார். இந்த படத்திற்கும் ஸ்டண்ட் சில்வாதான் சண்டைக் காட்சிகள் அமைக்க இருக்கிறார்.

படத்துவக்கவிழாவை முன்னிட்டு ட்விட்டரில் #Thala56 என அஜித் ரசிகர்கள் ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர். மேலும் படத்தின் க்ளாப் போர்ட் புகைப்படத்தை படக்குழுவினர் ட்விட்டரில் வெளியிட பலரும் அதை ஷேர் செய்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

படத்தின் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் கபீர் சிங் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார், இவர் தெலுங்கில் கோபிசந்த் நடித்த ‘ஜில் , ரவி தேஜா நடிப்பில் ‘கிக்2’ என இரு படங்களில் சமீபத்தில் வில்லனாக நடித்து தென்னிந்திய மொழிகளுக்கு ஏற்கனவே பழக்கமாகிவிட்டார். தமிழில் கபீருக்கு இது முதல் படம்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close